LATEST NEWS
வாரிசு திரைப்பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. கேட்டா ஆடி போயிருவீங்க…. அதிக சம்பளம் இவருக்கு தான்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. வம்சி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், குஷ்பூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக பட குழு சமீபத்தில் அறிவித்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளன. இந்தத் திரைப்படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் கதாநாயகன் விஜய்க்கு மட்டுமே 110 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. அடுத்ததாக ஹீரோயின் ராஸ்மிகாவுக்கு நான்கு கோடி, சரத்குமாருக்கு இரண்டு கோடி, பிரகாஷ்ராஜுக்கு 1.5 கோடி, ஷாமுக்கு 1 கோடி என பல நடிகர்கள் கோடியில் சம்பளம் வாங்கியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து யோகி பாபு 35 லட்சம்,குஷ்பூ 40 லட்சம் மற்றும் ஜெயசுதா 30 லட்சம் என சில நடிகர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.