TRENDING
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் கிராண்ட் பைனல் நடைபெற உள்ளதால் இந்த வாரம் கேப்டனாக மாறிய அமுதவாணனும் நாமினேசன் பட்டியலில் எதிர்பாராத விதமாக இடம்பெற்றுள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்த வாரம் நாமினேஷன் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. அதாவது ரெட் கார்டு வந்தால் நாமினேஷன், கிரீன் கார்டு வந்தால் ஒருவரை சேவ் செய்யலாம். மேலும் மஞ்சள் கார்டில் இதுவரை என்ன விளையாடி கிழித்து விட்டீர்கள் என்ற வாசகம் போட்டு பிக் பாஸ் டீம் இந்த சீசன் போட்டியாளர்களை தாறுமாறாக பேசியுள்ளது. அதே சமயம் இந்த வாரம் கேப்டன் ஆகி நாமினேஷனில் இருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணிய அமுதவாணனுக்கும் ரெட் கார்டு கொடுத்து நாமினேஷனில் போட்டியாளர்கள் சிக்க வைத்துள்ளனர்.
வீட்டில் உள்ள அத்தனை போட்டியாளர்களும் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ள நிலையில் கடந்த வாரம் விளிம்பு நிலையில் இருந்து தப்பித்த மைனா நந்தினி மற்றும் அசீம் இருவருமே இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். ஆனால் ஏடிகேவுக்கு சற்று உடல் நலம் சரியில்லை என்பதால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த வாரம் மைனா தப்பித்து விடுவார்.