“எங்கிட்ட இதெல்லாம் வச்சிக்காதீங்க”…. மிரட்டல்களுக்கு தக்க பதிலடி கொடுத்த வனிதா…. வைரல் பதிவு….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்கிட்ட இதெல்லாம் வச்சிக்காதீங்க”…. மிரட்டல்களுக்கு தக்க பதிலடி கொடுத்த வனிதா…. வைரல் பதிவு….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார். அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார்.

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் பற்றியும் தொடர்ந்த விமர்சனங்களை கூறி வருகின்றார். சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளர் விக்ரமனுக்கு ஆதரவாக விசிக கட்சியின் தொல் திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு வனிதா கண்டனம் தெரிவித்திருந்தார்.

Advertisement

அதாவது அரசியலை entertainment இல் புகுத்தாதிங்க என்று வனிதா கேட்டுக் கொண்டார். அவர் இப்படி பேசியதற்கு அதிக மிரட்டல்கள் வந்ததாக வனிதா புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பேசி உள்ள வனிதா, யாருக்கும் எதுக்கும் பயந்தவர் நான் கிடையாது, உங்க அரசியல் புத்தி என்னன்னு காலம் காலமா பார்த்திருக்கோம், உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சிக்காதீங்க என்று வனிதா பதிலடி கொடுத்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vanitha Vijaykumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vanithavijaykumar)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in