பிரபல காமெடி நடிகர் ஹரி வைரவன் சற்றுமுன் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…. இரங்கல்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல காமெடி நடிகர் ஹரி வைரவன் சற்றுமுன் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…. இரங்கல்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் விஷ்ணு விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு. இந்தத் திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து அப்பு குட்டி, பரோட்டா சூரி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படிப்பட்ட இந்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன். இவன் குள்ளநரி கூட்டம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு இவர் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட மிகவும் அவதிப்பட்டு வருவதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் மதுரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in