VIDEOS
பொது நிகழ்ச்சியில் நடிகை ஹனி ரோஸ் மீது விழுந்த ரசிகர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…..!!!!

மலையாள நடிகைகள் பலரும் இன்று தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றனர். ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு அமையவில்லை. ஒரு சிலர் மட்டுமே தமிழ் சினிமாவில் கால் தடத்தை பதித்துள்ளனர். அவ்வகையில் தமிழில் முதல் கனவு என்ற திரைப்படத்தில் மலையாள நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஹனி ரோஸ்.
அதன் பிறகு இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்த இவ்வாறு சமீபத்தில் நடிகர் ஜெய் மற்றும் சுந்தர் சி நடிப்பில் வெளியான பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் புதிய கடை திறப்பு விழாவிற்கு இவர் சென்றுள்ளார். அவரின் வருகையை அறிந்த அந்த ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் கடையின் அருகே கூட்டம் கூடினர்.
நடிகை வந்து இறங்கியுடன் செல்பி எடுக்க முயற்சி செய்தனர். அப்போது போலீசார் மற்றும் பவுன்சர்கள் அவர்களை தடுக்க இருந்தாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது சிலர் ஹனி ரோஸ் மீது விழுந்தனர். பிறகு போலீசார் உதவியுடன் நடிகை அங்கிருந்து கிளம்பினார். இதனை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க