LATEST NEWS
நடிகர் ஜான் விஜய் மனைவியை பார்த்திருக்கீங்களா?…. அப்படியே பார்க்க ஹீரோயினி போல் இருக்காங்களே…. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜான் விஜய். பொதுவாக சினிமாவில் நுழைந்தவுடன் யாருக்கும் மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்து விடாது. பல கடுமையான உழைப்புக்கு பின்னால்தான் அந்த வெற்றி இருக்கும். அவ்வகையில் சினிமாவில் வில்லன், காமெடி கலந்த வில்லன், காமெடி மற்றும் சென்டிமென்ட் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து மிரட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பெருமை நடிகர் ஜான் விஜய்க்கு சேரும்.
இவர் ரேடியோ ஜாக்கியாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தினார். அதே சமயம் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். காமெடியிலும் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அற்புதமாக நடிப்பார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் பிரபல அரசியல்வாதியின் மகளான மாதவி இளங்கோவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் ஜான் விஜய்க்கு ஹீரோயினி போல் இப்படி ஒரு மனைவியா என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.