CRIME
“பாத்ரூம்ல சடலம் கிடக்கு… குழாயையும் திறந்து வச்சிருக்கேன்..!” காதலனைக் கொன்றுவிட்டு ஹவுஸ் ஓனருக்கு..! காதலி அனுப்பிய ‘பகீர்’ வாய்ஸ் மெசேஜ்..!!!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள நில்காந்த் சொசைட்டி குடியிருப்பில், பூட்டப்பட்ட ஒரு பிளாட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மான்பாடா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டபோது, குளியலறையில் சாக்குமூட்டையில் அடைக்கப்பட்ட நிலையில் அழுகிய ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையை மறைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும், உடலைச் சாக்குமூட்டையில் கட்டி குளியலறையில் போட்டுள்ளனர். மேலும், ரத்தக்கறைகளைக் கழுவி உடலை விரைவில் அழுகச் செய்யும் நோக்கத்துடன், கொலையாளி குளியலறை குழாயைத் திறந்து விட்டுச் சென்றுள்ளார்.
இந்தக் கொடூரமான கொலையைச் செய்தவர் அந்த இளைஞரின் காதலி என்பது தெரியவந்துள்ளது. குற்றத்தைச் செய்த பிறகு அவர் கொல்கத்தாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார். தப்பி ஓடுவதற்கு முன், வீட்டின் உரிமையாளருக்கு ஒரு குரல் பதிவை அனுப்பி, குளியலறையில் சடலம் இருப்பதையும் குழாய் திறந்து இருப்பதையும் தெரிவித்துள்ளார். இந்த குரல் பதிவின் மூலமே வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொல்கத்தாவிற்குத் தப்பிய காதலியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
