Uncategorized
இந்த வேலை முடிஞ்சா தான் எனக்கு திருமணம்…. அதுவரைக்கும் கிடையாது…. நடிகர் விஷால் ஓபன் டாக்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் லத்தி திரைப்படம் பெரிய அளவில் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே விஷாலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் ஆக இருந்த நிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நின்றது. இதனைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிக்கு செல்லும் இடங்களில் அனைவரும் விஷால் திருமணம் எப்போது என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகிறார்கள்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு வரும் முதல் முகூர்த்தத்தில் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 3500 நடிகர்கள் மற்றும் நடன கலைஞர்கள் வாழ்க்கைக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக எனது குழுவினர் உழைத்து வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்த உழைத்து வருகிறோம். அவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் இன்சூரன்ஸ் வசதிகள் கிடைக்க வேண்டும் . எனவே கட்டிடம் முடிந்து திருமணம் நடக்கும் போது அனைவரையும் அழைப்பேன் என விஷால் வெளிப்படையாக கூறியுள்ளார்.
