LATEST NEWS
நான் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்…. ரசிகர்களுக்கு எதிர்பார்க்காத ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்…. இதுதான் காரணம்….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அடுத்தடுத்து இவரின் நடிப்பில் பல படங்களும் வெளியாக உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசியலில் ஈடுபட்டு வரும் உதயநிதி இன்று இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
திமுக கழக நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இன்று பொறுப்பேற்றார். தமிழக ஆளுநர் ஆரியன் ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பரிமாணம் செய்து வைத்து ரகசிய காப்பு பிரமாணம் செய்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாகவும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் எனவும் பேட்டி அளித்துள்ளார்.
நீங்கள் நடிப்பதை நிறுத்தி விட்டீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுல ஏன் உங்களுக்கு அவ்வளவு கவலை என கலகலப்பாக உதயநிதி பேசினார். இருந்தாலும் அமைச்சராக பதவி ஏற்ற உடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.