LATEST NEWS
“அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை”…. வதந்தியால் கோபமடைந்த நடிகை திரிஷா…. உண்மை இதுதான்….!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இதனிடையே இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல வருடங்களாக படங்களில் தோன்றாமல் இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார். டாப் நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மீண்டும் ட்ரெண்ட் ஆகிவிட்டார் திரிஷா.
இந்த நிலையில் திரிஷா அரசியலில் நுழைந்து தேசிய கட்சி ஒன்றிய இணைய இருப்பதாக பல செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இது பற்றி பேட்டி ஒன்றில் த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பிய போது, அதில் துளி கூட உண்மை இல்லை, எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என அவர் கோபமாக பதில் அளித்துள்ளார்.