LATEST NEWS
ரசிகரை பார்த்ததும் தலைதெறிக்க ஓடிய ஜோதிகா… அப்படி என்ன செஞ்சாரு…? இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ…!!

முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, அஜித் ஆகியோருடன் இணைந்து ஜோதிகா நடித்துள்ளார். இந்நிலையில் பேரழகன், குஷி, சந்திரமுகி, மொழி ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக ஜோதிகாவுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
90’s நாயகியாக வலம் வந்த ஜோதிகாவும் முன்னணி நடிகரான சூர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா 36 வயதினிலே, செக்கச் சிவந்த வானம், நாச்சியார், உடன்பிறப்பே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சூர்யாவும் சூர்யாவும் வெளிநாடு சென்று விட்டு மீண்டும் மும்பைக்கு வந்தனர். அவர்கள் மும்பை விமான நிலையத்தில் நடந்து சென்ற போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார்.
அதனை பார்த்ததும் ஜோதிகா ரசிகரை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இது ஜோதிகா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் சூர்யா சிலருக்கு மட்டும் செல்ஃபி போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
#KatrinaKaif South superstar Jyothika and Suriya snapped at the airport today, and it seems like Jyothika is in no mood for the picture. 🫣❤️ #Jyothika #Suriya #AirportDiaries pic.twitter.com/KvgdRGCVKo
— Filmyape (@Filmyape) January 3, 2024