LATEST NEWS
என்னடா இது..! பிக் பாஸையே பாட்டு பாட வச்சிட்டீங்களே.. வைரலான வீடியோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. கடைசியில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஜோவிகா, விசித்திரா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், பூர்ணிமா, வினுஷா, விஜய் வர்மா உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர். கடைசியாக இப்போது பிக் பாஸ் வீட்டில் ஐந்து போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதில் தினேஷம் ,அர்ச்சனாவும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்தார்கள். ஏற்கனவே விஷ்ணு இறுதி போட்டிக்கு செல்ல தகுதி பெற்று விட்டார்.
விஜய் வர்மாவை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் மிட் வீக் எவிக்ஷன் இருக்கிறதாம். இதனால் தினேஷ் அல்லது மணி இருவரில் யாராவது ஒருவர் தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது. வழக்கமாக நடைபெறுவதைப் போல பிக் பாஸ் வீட்டில் கடைசி வாரம் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அடுத்தடுத்து உள்ளே அனுப்பப்பட்டனர். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்ற பாடலை பிக் பாஸ் பாடியுள்ளார். அதனை கேட்ட போட்டியாளர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கடைசியில் பிக் பாஸையே செய்ய பாட வச்சிட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Finally BiggBoss Sings 👌👌 Thendral Vandhi Theendum podhum ❤️❤️❤️
#BiggBossSeason7 #BiggBoss7Tamil #BiggBossTamil7
pic.twitter.com/lB0lThChNc— BIGG BOSS FOLLOWER (@BiggBosstwts) January 12, 2024