LATEST NEWS
கமலுடன் தெய்வீகமான காதல்.. உயிர் போகும் நொடியில் கதறிய நடிகை ஸ்ரீவித்யா.. உண்மையை போட்டுடைத்த குட்டி பத்மினி..!!
உலக நாயகன் கமல்ஹாசன் திறமையான நடிகை ஸ்ரீவித்யா இடையேயான காதல் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரு பழைய பேட்டியில் கமல்ஹாசன் தனது காதல் பற்றி கூறியுள்ளார். அதாவது 19 வயது இருக்கும்போது கமல்ஹாசன் அபூர்வராகங்கள் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நான் திறமையான நடிகன் என்பதை எனக்கு உணர்த்தியது ஸ்ரீவித்யா தான். அவர் எனக்கு தோழி மட்டுமல்ல. காதலியும் தான்.
அந்த படம் மூலம் எங்களுக்குள் ஏற்பட்ட காதல் கடைசி வரைக்கும் இருந்தது. அந்த காதல் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறியிருந்தார். இதே போல இறப்பதற்கு முன்பாக ஸ்ரீவித்யா மலையாள செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அவரும் கமலும் காதலித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இருவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஸ்ரீவித்யாவின் அம்மா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி கமல்ஹாசன் ஸ்ரீவித்யா பற்றி உருக்கமான தகவலை கூறியுள்ளார். அதாவது ஸ்ரீவித்யாவிற்கு நாட்டியம் மற்றும் பாட்டு இரண்டும் தெரிந்ததால் இருவருக்கும் இடையே காதல் மலர அது ஒரு வாய்ப்பாக இருந்தது. அவர்களது காதல் ஆழமானது. தெய்வீகமானது.
ஆனால் பல விஷயங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். கமலும் வாணியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஸ்ரீவித்யா இறப்பதற்கு சிறிது நாட்கள் முன்பு நான் அவரை சந்தித்து பேசினேன். அப்போது ஸ்ரீவித்யாவை வைத்து நான் ஏற்கனவே ஒரு சீரியல் எடுத்திருந்தேன். இரண்டாவது சீரியல் குறித்து பேச தான் அவரை அழைத்தேன். ஆனால் ஸ்ரீவித்யா என்னை கொச்சிக்கு அழைத்தார்.
நான் அங்கு சென்றபோது ஸ்ரீவித்யா மருத்துவமனையில் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். ஸ்ரீவித்யா என்னை கட்டி அணைத்து அழுதார். நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இறந்து விடுவேன். எனக்கு கேன்சர் முற்றிவிட்டது. எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? என கையை பிடித்து அழுததாக குட்டி பத்மினி உருக்கமாக கூறியுள்ளார்.