LATEST NEWS
நாம கண்டுக்காத மாதிரியே இருப்போம்.. இசை கலைஞரை பக்கத்தில் வைத்துக்கொண்டு கொஞ்சி குலாவிய விக்னேஷ் நயன் தம்பதி.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார். அப்போது நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமணமான நான்கு மாதத்தில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று விட்டதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். திருமணமான உடனே வாடகை தாய் மூலம் எப்படி குழந்தை பெற்றீர்கள் என கேள்வி எழுந்த நிலையில் ஐந்தாண்டுகளுக்கு முன்பே பத்திரப்பதிவு திருமணம் செய்து கொண்டோம் என இருவரும் விளக்கம் கொடுத்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமண நாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் புல்லாங்குழல் கலைஞரான நவீன் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்து பாட வைத்துள்ளார். இந்நிலையில் நவீன் மறுவார்த்தை பேசாதே பாடலை புல்லாங்குழல் மூலம் வாசித்து கொண்டிருந்தபோதே நயன்தாரா தனது கணவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சுகிறார்.
இதனை கண்டு கொள்ளாமல் நவீன் புல்லாங்குழல் வாசித்து அவரது வேலையை மட்டும் பார்க்கிறார். தற்போது விக்னேஷ் சிவன் அந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் புல்லாங்குழல் ஊதும் இசைக்கலைஞர் பக்கத்தில் இருக்கும் போது கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? இன்னொருவரை பக்கத்தில் வைத்துக் கொண்டு இப்படி கொஞ்சுகிறீர்களே என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram