LATEST NEWS
திடீரென சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நயன்தாரா… அதுவும் இத்தனை கோடியா?.. ஹீரோக்களுக்கு டப் கொடுப்பாங்க போலயே..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட் திரையுலகில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதாவது அட்லி இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர உள்ள ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த நயன்தாரா ஹீரோயினியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா 75, இறைவன் மற்றும் டெஸ்ட் ஆகிய திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் திரைப்படத்திற்காக 10 கோடி ரூபாய் வரை நயன்தாரா சம்பளம் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை மேலும் உயர்த்தியுள்ளார். அதாவது இதுவரை 10 கோடி சம்பளமாக வாங்கி வந்த நயன்தாரா அதன்பிறகு தான் நடிக்க உள்ள படங்களுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.