GALLERY
அவசர அவசரமா கல்யாணம் பண்ணது அதனாலதான்.. பகீர் கிளப்பிய பயில்வான்.. ஒருவேளை அப்படி இருக்குமோ..?

முன்னணி நடிகையான அமலாபால் கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் ஏ. எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவருடன் 3 ஆண்டுகள் மட்டுமே இணைந்து வாழ்ந்தார்.
அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அமலா பால் ஏ.எல் விஜய் தம்பதியினர் கடந்த 2017-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இதனையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய் மருத்துவம் படித்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு அமலாபால் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக அமலாபால் அறிவித்த நிலையில் அடுத்த வாரமே கொச்சியில் குடும்பத்தினர் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து அமலா பால் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.
பின்னர் புத்தாண்டை ஒட்டி கடற்கரையில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக அமலா பால் கூறினார்.
அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், அமலாபாலின் வயிறு பெரிதாக இருப்பதை சுட்டிக்காட்டி அவர் திருமணத்திற்கு முன்னரே ஜெகத் தேசாயுடன் லிவிங் டுகெதர் வாழ்ந்து வந்ததாகவும், கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் ஆகி இருப்பாரோ என சந்தேகம் வருவதாகவும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.