LATEST NEWS
2 மணி நேரம் மலையேறி இமயமலையில் பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினி.. வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்த கையோடு ரஜினி மாலத்தீவு பக்கம் சென்று இருந்தார்.
அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்த அவர் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்தார். புதிய எனர்ஜியோடு விழா மேடையில் அவர் பேசிய பேச்சு அந்த அளவிற்கு இருந்தது.
அதுவே ஜெயிலர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற உணர்வை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இப்படி சூப்பர் ஸ்டார் என்ற பெயரே தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருந்த நிலையில் உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தில் ஆங்காங்கே சில விஷயங்கள் அதிருப்தியை கொடுத்திருந்தாலும் மொத்தத்தில் தலைவரை இப்படி ரகளையாக பார்த்ததில் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோசம் தான். பெரிய பெரிய டாப் ஹீரோக்களும் திரைப்படத்தைக் காண திரையரங்கில் குவிந்தது தான் இதில் ஆச்சரியம்.
தமிழக மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த அலப்பறைகளுக்கு எல்லாம் காரணமான ரஜினி தற்போது ஆன்மீக வழியில் அமைதியை தேடிக் கொண்டிருக்கிறார்.
அதாவது திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சூப்பர் ஸ்டார் இமயமலைக்கு கிளம்பிவிட்டார். சுமார் நான்கு வருட இடைவேளைக்குப் பிறகு இமயமலை செல்லும் ரஜினி இப்போது மிகவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறார்.
ரஜினி முதல் கட்டமாக ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி சமாதியை சென்று வணங்கி தனது பயணத்தை தொடங்கிய நிலையில் இமயமலையில் உள்ள விசாகர் குகைக்கு சென்றார்.
அதன் பிறகு நேற்று சுமார் 2 மணி நேரம் மலையேற்றம் செய்து மகா அவதார் பாபாஜி குகையில் தியானம் செய்து தன்னுடைய பயணத்தை ரஜினி தொடங்கினார். ரஜினி செல்லும் வழியில் அவர் இந்த ரசிகர்கள் காத்திருந்து அவருக்கு உற்சாக வரவேற்பாளித்து அவரோட புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தற்போது மகா அவதார் பாபாஜி குகைக்குச் சென்று ரஜினியின் தியானம் செய்து திரும்பிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க