அடச்சீ..! “குழந்தையை வச்சு இப்படியா பண்றது?” 4 வயது சிறுவன் தான் ‘மாஸ்டர் மைண்ட்… முட்டை கடையில் நடந்த நூதன கொள்ளை… பெண்களின் சைகையால் அதிர்ந்த நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடச்சீ..! “குழந்தையை வச்சு இப்படியா பண்றது?” 4 வயது சிறுவன் தான் ‘மாஸ்டர் மைண்ட்… முட்டை கடையில் நடந்த நூதன கொள்ளை… பெண்களின் சைகையால் அதிர்ந்த நெட்டிசன்கள்..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் நகரில் முட்டை கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடுவதற்கு, நான்கு பெண்கள் ஒரு 4 வயது சிறுவனைப் பயன்படுத்திய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த நூதன திருட்டுச் சம்பவம் முழுமையாகப் பதிவாகி, தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிசிடிவி காட்சிகளின்படி, அந்த நான்கு பெண்களும் வாடிக்கையாளர்களைப் போலக் கடைக்குள் நுழைந்துள்ளனர். கடைக்காரரின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் அவர்கள் சுற்றிலும் நின்று கொண்டு, வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாதவாறு அந்தச் சிறுவனுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர், அந்தப் பெண்களின் சைகையைப் புரிந்து கொண்ட 4 வயது சிறுவன், கவுண்டரில் இருந்த உண்டியலை நைசாக எடுத்து அருகில் இருந்த பைக்குள் மறைத்து வைத்துள்ளான். உண்டியலைத் திருடியவுடன் அந்தப் பெண்கள் சிறுவனுடன் சாதாரணமாகக் கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.

Advertisement

கடைக்காரர் உண்டியல் காணாமல் போனதை உணர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் இந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கடைக்காரர் அளித்த புகாரின் பேரில், லாத்தூர் நகர போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி அந்த மர்மப் பெண்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறு குழந்தைகளைக் குற்றப் பாதையில் தள்ளும் இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in