Uncategorized
எங்க அப்பா எப்படி இருக்காருன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்..? S.P.B குறித்து வந்த தகவலில் உண்மையில்லை.! மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோ..!!
கொ ரோனா பாதிப்பில் இருந்து பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் குணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து அவர் மகன் சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கொ ரோனா வால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு, தீ விர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக எஸ்பிபி உடல்நிலை, சீராக உள்ளது என்று அவரின் மகன் சரண் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொ ரோனா பரிசோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்திருப்பதாக சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் ட்வீட் செய்துள்ளார். இந்த தகவலை அவரின் மகன் சரண் கூறியுள்ளதாக தெரிவித்ததாக கூறிய நிகில் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தகவலை ம றுத்து வீடியோ வெளியிட்டுள்ள சரண் தந்தையின் உடல் நலம் குறித்த தகவலை நான் மருத்துவர்களிடம் ஆலோசித்த பின்னரே வெளியிடுவேன்.
எனக்கு மட்டும் தான் என் தந்தை எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்த தகவல் முதலில் மருத்துவர்கள் மூலம் கிடைக்கும். இதனிடையில் என் தந்தைக்கு கொ ரோனா நெகடிவ் வந்ததாக வ தந்தி பரவியதால் இந்த வீடியோவை வெளியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
எஸ்.பி.பி தற்போது சீரான நிலையில் இருந்தாலும் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் தான் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களிடம் பேசிவிட்டு மாலையில் நான் எஸ்.பி.பி உடல்நிலை குறித்த அடுத்தக்கட்ட தகவலை கூறுவேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இதோ
#SPB உடல்நிலை குறித்து #SPBCharan #Latestnews #SPBalasubramaniam #SPBalasubramanyam pic.twitter.com/55NNyDPs9P
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 24, 2020
