LATEST NEWS
பார்க்கிங்கா இத்தனை அக்கப்போரு?…. வீட்டிற்குள் புகுந்து தகராறு…. சரண்யா பொன்வண்ணன் மீது பகீர் புகார்…!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தமிழில் பல முன்னணி ஹீரோகளுக்கு தாயாக நடித்து அசதி வருகிறார். ஹீரோயினியாக நடித்ததை காட்டிலும் தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து மிகப்பெரிய புகழை எட்டி இருக்கின்றார். தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஸ்ரீதேவி. இவருக்கும் சரண்யா பொன்வனுக்கும் இடையில் சிறிது பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதாவது கார் பார்க்கிங் காரணமாக அடிக்கடி இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று மாலை சரண்யா பொன்வண்ணன் தனது காரை ஸ்ரீதேவி வீட்டின் அருகில் நிறுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.
அப்போது ஸ்ரீதேவி தனது காரை எடுப்பதற்காக வீட்டின் கேட்டை திறந்து இருக்கிறார். அந்த சமயத்தில் சரண்யா பொன்வண்ணனின் கார் சிறிது சேதாரம் அடைந்துள்ளது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த சரண்யா பொன்வண்ணன் அவரது வீட்டிற்கு சென்று தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீதேவி சரண்யா பொன்வண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.