திருமணமான 15 நாட்களில் பிரிவு, ஒரே மாதத்தில் விவாகரத்து.. புதிய கார் வாங்கி ஆக்ரோஷ பதிவு மூலம் பதிலடி கொடுத்த சீரியல் நடிகை சம்யுக்தா..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணமான 15 நாட்களில் பிரிவு, ஒரே மாதத்தில் விவாகரத்து.. புதிய கார் வாங்கி ஆக்ரோஷ பதிவு மூலம் பதிலடி கொடுத்த சீரியல் நடிகை சம்யுக்தா..!!

Published

on

பிரபல சீரியல் நடிகர்களான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் ஆகிய இருவரும் கலந்த ஏழு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் 15 நாட்களிலேயே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இவர்களின் இந்த பிரிவிற்கு சம்யுக்தாவின் அப்பா தான் முழு காரணம் என்று விஷ்ணுகாந்த் கூறியிருந்தார்.

அதே சமயம் இருவரும் லைவில் மாறி மாறி குற்றம் சாட்டி ஒரு கட்டத்தில் விஷ்ணுகாத் ஒரு காம கொடூரன் என்று சம்யுக்தா பலவித உண்மைகளை உடைத்தார். இவர்களின் இந்த விவகாரத்தை பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்த போது காதலித்த நிலையில் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சில நாட்களில் பிரிந்து விட்டனர்.

தற்போது சம்யுக்தா முத்தழகு என்ற சீரியலில் நடித்து வருகின்றார். விவாகரத்திற்கு பிறகு பல சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து நீண்ட சம்யுக்தா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கி பூஜை போட்டுள்ளார். அது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்து ஒரு நீண்ட பதிவை அவர் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Samyutha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samyutha.official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in