Uncategorized
ரசிகர்கள் இல்லாமல் இசை வெளியீட்டு விழாவா? அதிர்ச்சியில் தளபதி ரசிர்கர்கள்

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய், இவர் கடைசியாக பீகிள் படத்தில் நடித்தார் இப்படம் பெண்கள் கால்பந்து அணியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வெற்றியும் அடைந்தது.தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 9-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது,ஒரு கெட்ட செய்தி எனவென்றால் இந்த விழாவுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.ஆனால் சன் டிவியில் நேரடி ஒளிபரப்பாக தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான காரணம் என்ன என்று கேட்ட போது அதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் சற்று அதிகரித்து வருவதால் ரசிகர்களுக்கு எவ்வித பாதிப்பும் வந்து விட கூடாது என்பதற்காகவே விஜய் இப்படியொரு முடிவை படக்குழுவினரிடம் அழுத்தம் திருத்தமாக கூறி விட்டதாக தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவும் இந்த தகவல்கள் கூறுகின்றன.