LATEST NEWS
அக்காவை தொடர்ந்து சினிமாவில் இறங்கிய ரஜினியின் இளைய மகள்.. தொடங்கியது படப்பிடிப்பு… ஹீரோ இவரா..??

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினி முன்னணி நடிகராக இருந்தாலும் அவரின் இரண்டு மகள்களும் திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மூத்த மகளான ஐஸ்வர்யா சமீபத்தில் தனது தந்தையை சிறப்பு வேடத்தில் நடிக்க வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ள நிலையில் அதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. கேங்க்ஸ் என்ற வெப் தொடரை சௌந்தர்யா தயாரிக்க உள்ள நிலையில் நௌ ஆபிரகாம் இதனை இயக்க உள்ளார்.அதே சமயம் இந்த தொடரில் விரைவில் புது மாப்பிள்ளை ஆக உள்ள அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இந்த வெப் தொடரின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வர ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க