LATEST NEWS
வெடித்தது மோதல்..! மைதானத்தில் மாத்திரை அரைச்ச அமைச்சரை விட்டுட்டு… எம்.எல்.ஏவை கைது செய்யுறதா..? தவெக அரசை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்..!!
முதல்வர் விஜய்யை விமர்சித்து அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி, விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியான தவெக அரசு, அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினரை அராஜக முறையில் கைது செய்து அடக்கப் பார்ப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சி பெண் உறுப்பினருக்கு எதிராக நடந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீதோ, அல்லது மைதானத்தில் மாத்திரை அரைத்து சர்ச்சை ஏற்படுத்திய அமைச்சர்கள் மீதோ நடவடிக்கை எடுக்காத இந்த அரசு, அரசியல் ரீதியான சாதாரண விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது நடவடிக்கையில் ஈடுபடுவது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் எதிர்ப்பாளர்களை வேட்டையாடும் நோக்கில் காவல் துறையைத் தவறாகப் பயன்படுத்தி வரும் தவெக அரசுக்கு, வரும் நாட்களில் மக்கள் ஜனநாயக முறையில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், கைதான எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
