LATEST NEWS
“தவெக ஆட்சியில் நடப்பது சாத்தானின் ஆட்சி” கொஞ்சம் மனசாட்சியோடு நடந்துக்கோங்க… கொந்தளித்த மு.க.ஸ்டாலின்..!!
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை வழங்க வந்தவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகச் சுட்டிக்காட்டிய அவர், தவெக ஆட்சியில் மனித உரிமைகள் முற்றிலும் காலின்கீழ் போட்டு மிதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். அத்துடன், ஜனநாயக நெறிமுறைகளை மறந்து செயல்படும் இந்தத் தவெக ஆட்சியை “சாத்தானின் ஆட்சி” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ஆளுங்கட்சியின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குக் காவல்துறையினர் ஏவலாட்களாகச் செயல்படக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், காவல் துறையினர் தங்களின் மனசாட்சிப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரின் குரலை அடக்க நினைக்கும் இந்த அரசின் அடக்குமுறைகளுக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
