LATEST NEWS
நடிகர் வடிவேலு தாயார் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் காமெடி நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களின் எப்போதும் இவரது பெயர்தான். ஒரு ட்ரோல் செய்தால் கூட அதில் கட்டாயம் வடிவேலு பெயர் இடம் பெற்று இருக்கும். சமூக வலைத்தளங்களின் நெட்டிசனல் பலரும் இவரை வைத்து தான் ட்ரோல் செய்கின்றனர். அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர்.
நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்ற பாப்பா வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு திடீரென காலமானார். அவருக்கு வயது 87. வடிவேலு வீட்டில் தாயாரின் உயிரிழப்பு குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.