LATEST NEWS
மனைவியுடன் இருக்கும் புகைப்படத்துடன் சூப்பர் செய்தியை சொன்ன சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா சம வைரல்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா தற்போது அப்பாவாகி உள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பாடி பிரபலமானவர்கள் பலர். இந்த நிகழ்ச்சியில் பாடியதன் மூலமாக பலருக்கும் திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதன் மூலமாக அவர்கள் பெரிய நிலைமைக்கு வந்துள்ளனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா.
தனது குரல் மூலமாக மக்களை கட்டி போட்டவர். அதுமட்டுமில்லாமல் குரலை மாற்றிப் பாடி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவருக்கு சமீபத்தில் தான் ஜெஸி என்று பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு இவர்களின் பெற்றோர்கள் சம்மதிக்காவிட்டாலும் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அஜய் கிருஷ்ணா ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். அதாவது அவரது மனைவி ஜெஸி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை தனது instagram பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் அஜய் கிருஷ்ணர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.