LATEST NEWS
பருத்திவீரன் விவகாரம்… அமீருக்கு பதிலாக அந்த மலையாள சூப்பர் ஸ்டாரை போடுங்க.. சூர்யா போட்ட கண்டிஷனால் கடுப்பான வெற்றிமாறன்..!!

பருத்திவீரன் பட இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பருத்திவீரன் படத்திற்கு அமீர் பொய் கணக்கு காட்டி பணத்தை திருடினார் என ராஜா கூறியுள்ளார். அந்த படத்தில் வேலை பார்த்த இயக்குனர்களான சமுத்திரக்கனி, சசிகுமார், நடிகர் பொன்வண்ணன், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் அமீருக்கு ஆதரவாக பேசினர்.

#image_title
பருத்திவீரன் படம் சுமூகமாக வெளி வருவதற்கு சூர்யா உதவி செய்துள்ளார். பருத்திவீரன் படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சூர்யா, இயக்குனர் அமீர், கார்த்தி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சி.சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் என அதே பெயரில் படம் இயக்க உள்ளார்.

#image_title
இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் அமீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பருத்திவீரன் பட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு சூர்யா அமீர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு பதிலாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை நடிக்க வைக்கலாம். அவரிடம் நான் பேசுகிறேன் என சூர்யா கூறியதாக தெரிகிறது.

#image_title
ஆனால் அந்த கேரக்டருக்கு அமீர்தான் சரியான ஆளாக இருப்பார் வாடிவாசல் திரைப்படத்தில் அந்த கேரக்டருக்கு அமீரை தவிர வேறு யாரும் செட் ஆக மாட்டார்கள் என வெற்றிமாறன் விடாப்படியாக கூறியதாக தெரிகிறது. மேலும் நடிகர்களுக்காக கதை எழுதவில்லை எனவும், படத்தின் கதா பாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என வெற்றிமாறன் கூறியதாக தெரிகிறது. சமீபத்தில் கூட வெற்றி மாறனும், அமீரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

#image_title