TRENDING
‘பெண்குழந்தையின் தகப்பன்’… “டிக் டாக்கில்”.. ‘இளம் பெண்களை மயக்கி.. திருமணம் செய்த கொடுமை… “பண்ருட்டியில் நடந்த பகீர் தகவல்”…?
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வருபவர் ராஜசேகர் இவர் டிக் டாக்கில் பல பெண்களை மயக்குவதில் இவருக்கு மன்மதன் என்று அடைமொழி ஒன்று உள்ளது. இந்த ராஜசேகர் சுகன்யா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இரண்டு வயதில் பெண்குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் குடிப்பழக்கம் உள்ள ராஜசேகர் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வருவார்.
மேலும் டிக் டாக்கில் தான் ஒரு சிங்கிள் என்று கூறி டிக் டாக் மூலம் பல பெண்களை காதலித்து திருமணம் செய்துள்ளார். மேலும் நான் சினிமா துறையை சார்ந்தவன் எனக்கு பல நடிகர்களுடன் தொடர்பு உள்ளது என்று கூறி பல பெண்களிடம் பழகி வந்தார்.
இதற்க்கு முன்னர் அறந்தாங்கியில் உள்ள ஜவுளி கடையில் வேலைசெய்து வந்த கவிநயா என்ரை பெண்ணை டிக் டாக்கில் மயக்கி திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து ராஜசேகரின் மனைவி சுகன்யா பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு பெண்ணுடன் ராஜசேகர் தலைமறைவாக உள்ளார்.
இதனால் இந்த டக் டாக்கை தடை செய்யுமாறும் தன் கணவனை மீட்டு தருமாறு சுகன்யா போலீசாரிடம் புகார் அளித்தார்.
