“விஜய் இனி CM இல்லை.. PM” மோடி, ராகுலுக்கு டஃப் கொடுக்கும் விஜய்… பரபரப்பு சர்வேயால் அதிரும் டெல்லி… அடுத்த இலக்கு பிரதமர் நாற்காலியா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் இனி CM இல்லை.. PM” மோடி, ராகுலுக்கு டஃப் கொடுக்கும் விஜய்… பரபரப்பு சர்வேயால் அதிரும் டெல்லி… அடுத்த இலக்கு பிரதமர் நாற்காலியா..?

Published

on

இந்தியா டுடே நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ சர்வேயில், தமிழக முதலமைச்சர் மற்றும் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு அடுத்த பிரதமருக்கான ஆதரவில் சுமார் 9% வாக்குகள் கிடைத்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடி (49%), ராகுல் காந்தி (27%) ஆகியோருக்கு அடுத்தபடியாக, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற முன்னணித் தலைவர்களை முந்தி விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்த தகுதியானவர் என்ற கேள்வியிலும் ராகுல் காந்திக்கு (29%) அடுத்தபடியாக விஜய்க்கு 12% ஆதரவு கிடைத்துள்ளது.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆன நிலையில் விஜய்க்குத் தேசிய அளவில் கிடைத்துள்ள இந்த ஆதரவை முன்னிறுத்தி, தவெகவினர் “2029-ல் விஜய்தான் அடுத்த பிரதமர்” என்ற பிரச்சாரத்தை தற்போதே முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், தவெக நிர்வாகிகள் இன்னும் ‘ரசிகர் மன்ற மனநிலையில்’ இருந்து கொண்டு இத்தகைய முதிர்ச்சியற்ற இலக்குகளைப் பேசுவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. தற்போதைக்குத் தமிழக ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில அரசியலில் மட்டுமே தவெக கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த 9% சர்வே முடிவு விஜய்யின் அகில இந்திய செல்வாக்கிற்கான ஒரு தொடக்கப்புள்ளியாகப் பார்க்கப்பட்டாலும், அவரது அடுத்த அதிகாரப்பூர்வ இலக்கு பிரதமர் பதவிதானா என்பதை அக்கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in