LATEST NEWS
“வாயை லாக் செய்த விஜய் .. மாஸ்டர் பட வாத்தியாருக்கு நிஜத்தில் என்னாச்சு?”.. முதல்வர் விஜய்யை அதிரவைத்த சேகர்பாபுவின் பஞ்ச்.. சூடான அரசியல் களம்..!!
சென்னையில் நடைபெற்ற திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் லாக்கப் மரண விவகாரங்களை முன்வைத்து முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள கைதிகளைத் திருத்தும் சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். திரையில் அவ்வாறு நீதிக்காகப் பேசிய விஜய், நிஜ வாழ்க்கையில் முதல்வராக இருக்கும்போது நடக்கும் இத்தகைய கொடூரமான லாக்-அப் மரணங்கள் குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, மாநிலத்தில் அடுத்தடுத்து நிகழும் லாக்கப் மரணங்களுக்கு எதிராக எவ்வித குரலும் எழுப்பக் கூடாது என்று முதல்வர் விஜய் தனது வாயை அவரே ‘லாக்’ செய்து வைத்துள்ளதாகக் காரசாரமாகக் குற்றம் சாட்டினார். சினிமாவில் மட்டுமே கைதிகளின் உரிமைக்காகவும், சீர்திருத்தத்திற்காகவும் பேசும் விஜய், நிஜ ஆட்சியில் காவல் துறையின் அத்துமீறல்களைக் கண்டிக்கத் தவறிவிட்டார் என்றும், இந்த விவகாரத்தில் அவரது அமைதி கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது பேச்சில் சாடியுள்ளார்.
