TRENDING
“என்ன மைனா இதெல்லாம்?”…. நீங்க இப்படி இருக்கீங்கன்னு நினைச்சு கூட பார்க்கல…. வசமாக சிக்கிய மைனாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் முதலில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்து வாரங்களில் ஜி பி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி மற்றும் நிவாஷினி என போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது மைனா நந்தினி ரட்சிதாவை பற்றி சக போட்டியாளர்களிடம் பேசும் வீடியோ தான் அது. அந்த வீடியோவில் ரட்சிதா பற்றி அவர் மோசமாக பேசியுள்ளார். ரக்ஷிதாவின் முன்பே ஒரு மாதிரி பேசிவிட்டு தற்போது அவர் இல்லாத சமயத்தில் வேறு மாதிரி பேசுகிறார் என நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
https://twitter.com/Always_Rachitha/status/1596475599467728898