TRENDING
உள்ள யார் இருக்காங்க?…. பிக்பாஸ் வீட்டில் பாத்ரூமில் தலையை நீட்டிய அமுதவாணன்…. வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 40 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்து ஆறு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீசன் சண்டை சச்சரவு என தினம் தோறும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நிவாஸினி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் அமுதவாணன் செயல்பட்டுள்ளார்.
அதாவது போட்டியாளர் அனைவரும் பயன்படுத்தும் பாத்ரூம் ஒன்றில் மூடி இருக்கும் போது அருகில் நின்று எட்டிப் பார்த்துள்ளார். அவரின் அந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.
https://twitter.com/ahem_built/status/1595282026240053248