LATEST NEWS
யூடியூபரை வம்புக்கு இழுத்த….விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் கைது…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நாஞ்சில் விஜயன். இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வெகுவாக வென்றுள்ளார். அதே சமயம் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். இவருடன் இணைந்து சூர்யா தேவி என்ற youtube பிரபலமும் வனிதாவை மோசமான வார்த்தைகளில் திட்டியதால் சூர்யா தேவி மீது வனிதா வழக்கு தொடுத்தார்.
அதனால் அவரை போலீசார் கைது செய்தனர். பிறகு சூர்யா தேவி ரவுடிகளை அனுப்பி வீடியோவை பகிர்ந்த நிலையில் காவல் நிலையத்தில் சூர்யா தேவி மீது புகார் அளித்தார். அதன் பிறகு தன்னை அவதூறாக பேசி மிரட்டுவதாக சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் மீது காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்ட நிலையில் நாஞ்சில் விஜயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு போலீசார் பலமுறை சமன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் பலமுறை ஆஜராகாமல் இருந்ததால் நேற்று நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்தனர்.