TRENDING
30 ,000 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பிக்க வழியில்லாத நிலைமைக்கு உள்ளனர் ..!! இதுவரை 1000 குடியிருப்புகள் அழிந்தது..?? பரிதாபத்தில் உள்ள ஆஸ்திரேலியா..

ஆஸ்திரேலியாவில் கோடைகாலம் வந்தாலே நூற்றுக்கணக்கில் பல பகுதிகளில் தீக்குழம்புகள் ஏற்படும் இதற்கான காரணம் அங்கு நிலவு வறட்சிதான். ஆஸ்திரேலியாவில் ,மெல்போர்னுக்கு கிழக்கே விக்டோரியா மாநிலத்தின் பிரபலமான கிழக்கு கிப்ஸ்லேண்ட் பகுதியில் தற்பொழுது இந்த கோடைகாலம் குறித்து உருவான தீக்குழம்பில் ஒன்று தீயை பற்றியுள்ளது இதனால் அந்த பகுதியில் உள்ள காடுகளில் தீ கோரத்தாண்டவத்தில் உள்ளது .
இந்த பகுதியில் தீக்குழம்பு வலுவடைந்து உள்ளதால் பொதுமக்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை செல்ல வேண்டாம் அப்படி மீறி சென்றால் அது தற்கொலைக்கு சமம் என்று அறிவுறுத்தியும் பல சுற்றுலா பயணிகள் சென்றார்கள். ஆனால் தற்பொழுது ஏற்பட்ட காட்டு தீயால் அவர்களால் வெளியே தப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர். சுமார் அந்த தீயில் மாட்டிக்கொண்டார்வர்களின் கணக்கு பார்த்தால் 30 ,000 பெயர்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இவர்களின் நிலை தற்பொழுது வரை என்னநிலைமை என்பது தெறிப்படவில்லை.மேலும் அந்த வெளிநாட்டவர்களின் அந்த இடத்தை விட்டு வெளியேற சொன்ன உத்தரவு நிராகரிக்க பட்டதாகவும் தெரிந்துள்ளது.மேலும் அந்த காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் செல்லும் சாலை வழிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிபத்துக்குவுள்ளான நியூ சவுத் வேல்ஸில் அடுத்த இரண்டு நாட்களில் நிலைமைகள் மேலும் மோசமடையும் சூழல் இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதுவரை கிடைத்த தகவலின் படி 100 க்கும் மேற் பட்ட இடங்களில் தீக்குழம்பு எரிந்துகொண்டு இருப்பதாகவும் மேலும் அதில் 40 இடங்களில் தீயை அனைத்து விட்டதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த காட்டு தீயினால் குடியிருப்பு மக்கள் அகற்ற பட்டதாகவும் மேலும் 1000 குடிருப்புகள் முற்றிலும் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்க பட்டுள்ளது. மேலும் சுற்றுலா சென்ற வெளிநாட்டவர்களின் நிலைமை என்ன என்பது குறித்தும் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.