CINEMA
“அவளுக்கு என்ன அருகதை இருக்கு?” ரவி மோகன் குறிப்பிட்ட அந்த 3 எழுத்து நடிகை யார்? பற்றியெரியும் தமிழ் திரையுலகம் …!
திரையுலகில் 23 ஆண்டுகள் கடந்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரவி மோகன், இன்று திடீரென நடத்திய பிரஸ் மீட்டில் தனது விவாகரத்து விவகாரம் மற்றும் தான் சந்தித்து வரும் குடும்பப் பிரச்சனைகள் குறித்து கண்ணீர் மல்கவும், ஆக்ரோஷமாகவும் பேசியுள்ளார். தனது கட்டாயத் திருமண வாழ்க்கை நரகமாக மாறியதாகவும், கடந்த சில ஆண்டுகளில் சந்தித்த அவமானங்களால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவாகரத்து நடைமுறைகள் முழுமையாக முடியும் வரை தான் எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும், தனது திரைப்படங்கள் எதுவும் இனி திரையரங்குகளில் வெளியாகாது என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தன் குழந்தைகளைப் பார்க்கக்கூட தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு பாதுகாப்பு பணியாளர்கள் அனுப்பப்பட்டு, தனது மொபைல் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக ரவி மோகன் குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு, தன்னைத் தொடர்ந்து மிரட்டுபவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பவர்களுக்கும், நேராக தனது அலுவலகத்திற்கே வந்து பேசுமாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பாடகி கெனிஷா மீது சமூக வலைதளங்களில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களால் அவர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட ரவி, அவர் எங்கு இருந்தாலும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் உருக்கமாகக் கூறியுள்ளார்.
இந்த பிரஸ் மீட்டில் பி.ஆர் (PR) குழுக்களைக் கொண்டு சமூக வலைதளங்களில் தன்னைத் தாக்கிப் பேசுபவர்கள் மீது கடுமையான சாடல்களை முன்வைத்த ரவி மோகன், குறிப்பாக தமிழ் சினிமாவின் “3 எழுத்து இட்லி நடிகை” ஒருவரைப் பற்றி மிகக் காட்டமாகப் பேசியுள்ளார். தன் தலைமுறையைச் சேர்ந்த மூன்று நடிகர்களின் வாழ்க்கையைக் கெடுக்க முயன்றதாகக் கூறப்படும் அந்த நடிகைக்கு, தன் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ அல்லது தன்னை ஒரு தவறான மனிதர் என்று விமர்சிக்கவோ எந்தவித அருகதையும் துப்பும் இல்லை என்று ஆவேசமாக வெளுத்து வாங்கியுள்ளார். தன்னை மேலும் யாராவது தூண்ட நினைத்தால் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்றும், இனிமேலும் தன்னைப்பற்றி அவதூறாகப் பேசினால் சும்மா இருக்கப் போவதில்லை என்றும் அந்த நடிகைக்கு அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
