“பொதுவெளியில் தோழியோடு வீடியோ போட்டா மக்கள் பேசத்தான் செய்வாங்க…!”முதல்ல உங்க முகத்தை கண்ணாடியில பாருங்க…!ஜெயம் ரவியை விளாசிய சுசித்ரா…!” – cinefeeds
Connect with us

CINEMA

“பொதுவெளியில் தோழியோடு வீடியோ போட்டா மக்கள் பேசத்தான் செய்வாங்க…!”முதல்ல உங்க முகத்தை கண்ணாடியில பாருங்க…!ஜெயம் ரவியை விளாசிய சுசித்ரா…!”

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் மற்றும் விவாகரத்து விவகாரம் குறித்துப் பேசி இருந்தார். தன் மீதான சமூக வலைதள விமர்சனங்களால் ஏற்பட்ட மன அழுத்தம் குறித்தும், தற்கொலை முயற்சி குறித்தும் அவர் கண்ணீருடன் வெளிப்படுத்திய ஆதங்கம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஜெயம் ரவியின் தற்போதைய நிலைப்பாடு குறித்துப் பல அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய சுசித்ரா, ஜெயம் ரவியின் செய்தியாளர்கள் சந்திப்பைப் பார்த்துப் பலரும் பதறிப்போய், அவருக்கு யாராவது உதவ மாட்டார்களா என்று கவலைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “அவர் அந்தப் பேட்டியை முழுமையான சுயநினைவோடு கொடுக்கவில்லை; அவருக்குள் இருந்த ஆல்கஹால் மற்றும் பிற பழக்கங்கள் தான் அவரை ஆட்கொண்டு பேச வைத்தது போலத் தோன்றியது. இதனால் சில உண்மைகள் இருந்தாலும், பல உண்மையற்ற விஷயங்களும் அதில் வெளிவந்துள்ளன. ஒரு நபர் இந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால், அவரை உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், அவருக்கு உண்மையாக உதவ நினைப்பவர்களையே அவர் தள்ளி வைப்பதால், கூட இருப்பவர்களே அவருக்கு மேலும் ஊற்றிக் கொடுத்துக் கெடுக்கிறார்கள்” என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து பேசிய சுசித்ரா, ஒரு மனிதருக்கு மாற்றம் தேவைப்பட்டால் முதலில் அவர் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்து என்ன பிரச்சினை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும் மனப்பக்குவம் இல்லை என்றால் பெற்றோர்களே கைவிடும் நிலைதான் வரும் என்றும் எச்சரித்துள்ளார். “சமூக வலைத்தளங்களால் தான் என் வாழ்க்கை கெட்டுப்போனது என்று ஜெயம் ரவி பழி போடுகிறார். ஆனால் பொதுவெளியில் ஒரு தோழியுடன் இருக்கும் வீடியோவைப் பகிர்ந்தால், அதற்கு மக்கள் ரியாக்ட் செய்வதுதான் சோஷியல் மீடியாவின் இயல்பு. அங்கு எல்லோரும் நல்லதை மட்டும்தான் பேச வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது” எனப் பாடகி சுசித்ரா அந்த வீடியோவில் ஓபனாகப் பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in