Uncategorized
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 உயர்வு…. இன்றைய விலை நிலவரம் இதோ…!!
சென்னையில் கடந்த மே மாத இறுதி வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, நடப்பு ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியான சரிவைச் சந்தித்து வந்தது. குறிப்பாக, கடந்த வாரம் ஜூன் 1-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,040 குறைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இந்தத் தொடர் சரிவின் காரணமாக, ஜூன் 8-ஆம் தேதி நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,040 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,070-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்குச் சுமார் 4,480 ரூபாய் வரை கணிசமாகக் குறைந்து நுகர்வோருக்குச் சற்று நிம்மதி அளித்திருந்தது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை திடீரென அதிரடியான உயர்வைச் சந்தித்து நுகர்வோருக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விறுவிறுப்பாக விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலையில் இத்தகைய பெரும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் அதே வேளையில், வெள்ளியின் விலையானது எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து 4-வது நாளாக நிலைப்புத் தன்மையுடன் நீடிக்கிறது. அதன்படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,70,000-க்கும் சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
