LATEST NEWS
சண்டை போட்ட மனைவி…! மாமியாரை திருமணம் செய்த மருமகன்…. வீடியோவை பார்த்து ஷாக்கான மகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில வருடங்களாகத் தீவிரமான குடும்பத் தகராறு நீடித்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றதால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
அந்த இக்கட்டான சமயத்தில், கணவன்-மனைவியைச் சேர்த்து வைக்க வேண்டிய மாமியார், மருமகனுக்கு ஆறுதல் கூறுவது போலத் தனது மகளையே தொடர்ந்து குறை கூறிப் பேசி வந்துள்ளார். மாமியாரின் இத்தகைய பேச்சில் மயங்கிய மருமகனுக்கும் அவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் தீவிரமான கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தங்களது இந்த கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் சமுதாயத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பும் என அஞ்சிய மாமியாரும் மருமகனும், வீட்டை விட்டு திடீரெனத் தப்பியோடினர். காணாமல் போன இவர்களைக் குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், இந்த விசித்திர ஜோடி கான்பூர் நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்து தங்களது வயதுச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துச் சட்டப்பூர்வமாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டது.
பின்னர் நீதிமன்ற வளாகத்திலேயே மாலைகளை மாற்றிக் கொண்ட அவர்கள், தாலியுடன் இருக்கும் திருமண வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுத் தங்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவிட்டுத் தங்களுக்குப் பிடித்தமான இடத்திற்கு ஹனிமூன் சென்றுவிட்டனர்.
