முதலமைச்சர் விஜய் செய்த உன்னத காரியம்…விஜய்யை துரத்தியடித்த பாரதிராஜா…அரசியல் பகையை தாண்டிய பாசம்…பாரதிராஜாவின் மரணத்திற்கு பின் வைரலாகும் விஜய்யின் அரிய பக்கங்கள்…! – cinefeeds
Connect with us

CINEMA

முதலமைச்சர் விஜய் செய்த உன்னத காரியம்…விஜய்யை துரத்தியடித்த பாரதிராஜா…அரசியல் பகையை தாண்டிய பாசம்…பாரதிராஜாவின் மரணத்திற்கு பின் வைரலாகும் விஜய்யின் அரிய பக்கங்கள்…!

Published

on

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் அரசு மரியாதையுடன் வழிஅனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரைப் பற்றிய கடந்த கால சுவாரஸ்யமான நினைவலைகளும் பேட்டிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போதைய தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் குறித்து பாரதிராஜா முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்று இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரம்ப காலத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தனது மகனை பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க வைக்க அழைத்துச் சென்றபோது, தான் விஜய்யை நிராகரித்துவிட்டதாக பாரதிராஜா அந்தப் பேட்டியில் ஓபனாக ஒப்புக்கொண்டுள்ளார்.

“ஏன் உனது இயக்கத்திலேயே அவனை நடிக்க வைக்கலாமே என்று எஸ்.ஏ.சியிடம் கேட்டேன்; அப்போது எனக்கு விஜய்யை நடிக்க வைக்கத் தோன்றவில்லை, அதனால் ரிஜெக்ட் செய்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ள பாரதிராஜா, இன்று விஜய் அடைந்திருக்கும் ‘நம்பர் ஒன்’ உயரத்தைப் பார்த்து, “விஜய்யை அன்று ரிஜெக்ட் செய்துவிட்டோமே என்ற வருத்தம் எனக்குள் இப்போதும் இருக்கிறது; இதனை ஒருமுறை விஜய்யைச் சந்தித்தபோதே அவரிடமும் நேரடியாகக் கூறினேன்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், தன் மகனை ஒரு பெரிய கதாநாயகனாக மாற்ற தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் எவ்வளவு உழைத்துள்ளார் என்பதையும், தடைகளைக் கடந்து விஜய் இன்று அடைந்துள்ள உச்சத்தையும் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement

அதே நேரத்தில், தன்னை அன்று நிராகரித்த இயக்குநர் என்ற எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல், தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞரான பாரதிராஜாவிற்கு விஜய் எப்போதும் உரிய மரியாதையையும் அன்பையும் வழங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவின் போது நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய், தற்போது பாரதிராஜாவின் மறைவின் போதும் தமிழக முதலமைச்சராக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதுமட்டுமின்றி, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற உத்தரவிட்டுத் தன் குரு போன்ற கலைஞருக்குச் செய்ய வேண்டிய உச்சகட்ட மரியாதையைச் செய்து முடித்துள்ளார். இந்த நன்றியுணர்வுதான் முதலமைச்சர் விஜய்யின் ஆகச்சிறந்த பண்பு என இணையவாசிகள் நெகிழ்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in