LATEST NEWS
“6 மாசத்துல கூட தேர்தல் வரலாம்…” ஸ்டாலின் CM ஆக போட்ட ஓட்டு அது!”… விஜய் அரசு யாருடைய தயவில் நடக்கிறது…? தவெக ஆட்சியை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்…!!
சென்னையில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் இன்னும் ஆறு மாதங்களில் கூட பொதுத்தேர்தல் வர வாய்ப்புள்ளதால் உடன்பிறப்புகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் தவெக ஆட்சியானது திமுக கூட்டணியின் தயவிலும், ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் அளித்த வாக்குகள் மூலமுமே தட்டுத்தடுமாறி நடப்பதாக அவர் சாடினார். பார்த்துப் பார்த்து வளர்த்த தமிழகத்தைச் சீரழிய விடமாட்டோம் என்று குறிப்பிட்ட அவர், தமிழர்களின் நிலத்தையும் மாநில உரிமைகளையும் பாதுகாக்க திமுக என்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று உறுதியளித்தார்.
தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, தொடர் மின்வெட்டு போன்ற காரணங்களால் மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், நடக்கும் குற்றச் செயல்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கே நேரடித் தொடர்பு இருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் இந்திய அளவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய தமிழகம், தற்போது நிலவும் அசாதாரண சூழலால் புதிய தொழில்களை அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்து வருவதாகக் கவலை தெரிவித்தார். ஆளுங்கட்சி அமைச்சர்களை நோக்கிப் பொதுமக்கள் தற்போதே கேள்விக் கேட்கத் தொடங்கிவிட்டதால், ஆட்சி மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என அவர் தொண்டர்களை உத்வேகப்படுத்தினார்.
