BREAKING: தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கம்.. தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கம்.. தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

Published

on

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தின்தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த மற்றும் அண்மையில் அக்கட்சியுடன் கைகோர்த்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் , இடதுசாரி இயக்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்உள்ளிட்ட முக்கிய தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் தோழமைக் கட்சிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இது என்பதால், தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை முடிவுகளைத் தீர்மானிப்பதில் இந்த நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in