காரகஸை உலுக்கிய நிலநடுக்கம்… 4 நாட்களுக்குப் பின் நிகழ்ந்த அதிசயம்… 96 மணி நேர மரணப் போராட்டத்த்திற்கு பின்.. மீட்கப்பட்ட தந்தை மகன்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காரகஸை உலுக்கிய நிலநடுக்கம்… 4 நாட்களுக்குப் பின் நிகழ்ந்த அதிசயம்… 96 மணி நேர மரணப் போராட்டத்த்திற்கு பின்.. மீட்கப்பட்ட தந்தை மகன்..!!!

Published

on

 வெனிசுலாவில் ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என்ற அளவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. இதில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், மிக மோசமாக பாதிக்கப்பட்ட லா குவைரா கடலோர மாநிலத்தில் ஒரு பெரிய கட்டட இடிபாடுகளுக்கு அடியில் தந்தையும் மகனும் சிக்கிக் கொண்டனர். உணவு மற்றும் தண்ணீரின்றி நான்கு நாட்களாக  அவர்கள் இடிபாடுகளுக்குள்ளேயே உயிருக்காகப் போராடி வந்தனர்.

 பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மீட்புக் குழுவினர் அதிநவீன கேமராக்கள் மற்றும் அதிர்வு கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்தி, அந்த இடிபாடுகளுக்கு அடியில் மனித நடமாட்டம் இருப்பதை மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்தனர். சரிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்த இடிபாடுகளை மீட்புப் படையினர் மிகவும் கவனமாக அகற்றி, சுமார் 12 மணி நேரம் தொடர்ச்சியாகப் போராடி இருவரையும் பத்திரமாக மீட்டனர். நீண்ட நாட்களாக உணவு, தண்ணீரின்றி இருந்ததால் கடுமையான நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தீவிர சோர்வோடு இருந்த இருவரையும் மீட்ட மருத்துவர்கள், தற்போது அவர்கள் உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

 இதற்கு முந்தைய நாளில் இதே சர்வதேச மீட்புக் குழுவினர் ஒரு பெண்ணையும் அவரது 9 மாதக் குழந்தையையும் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்டிருந்தனர். இந்த அடுத்தடுத்த மீட்புச் சம்பவங்கள் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கப் பேரழிவில் இதுவரை 1,450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோரின் நிலை இன்னும் தெரியவில்லை என்பதால், சர்வதேச நாடுகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் மிகத் துரிதமாகக் காலத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு நடந்து வருகின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in