CINEMA
“விஜய் அப்பா போட்ட ‘அந்த’ கண்டிஷன்.. 24 வருடத்திற்கு முன் நடந்த அந்த ‘மிஸ்ஸிங்’ சம்பவம்..இயக்குநர் லிங்குசாமி சொன்ன எக்ஸ்க்ளூசிவ் பிளாஷ்பேக்”..!!
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக விளங்கி, தற்போது தமிழக முதல்வராக இருக்கும் விஜய் குறித்து, இயக்குநர் லிங்குசாமி 24 ஆண்டுகளாக வெளியில் சொல்லாத ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற ‘ரன்’ திரைப்படத்தில், முதலில் விஜய்யை நடிக்க வைக்கவே படக்குழுவினர் விரும்பியுள்ளனர். இக்கதையை தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனிடம் லிங்குசாமி கூறியபோது, இதில் விஜய் நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று அவர் பரிந்துரை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் தந்தையிடம் இயக்குநர் லிங்குசாமி இக்கதையை விவரித்துள்ளார். ஆனால், அந்தச் சமயத்தில் விஜய் ‘தமிழன்’ திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்துவந்துள்ளார். மேலும், “பெண்களுக்குப் பின்னால் சுற்றித் திரியும் இத்தகைய காதல் கதை விஜய்க்குச் செட் ஆகாது, வேண்டாம்” என்று அவரது தந்தை மறுத்துவிட்டதால், ‘ரன்’ படத்தில் விஜய்யால் நடிக்க முடியாமல் போயுள்ளது. இதன் பிறகு, தனது இயக்கத்தில் உருவான ‘சண்டக்கோழி’ மற்றும் ‘வேட்டை’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களிலும் விஜய்யை நடிக்க வைக்க லிங்குசாமி எடுத்த முயற்சிகளும் சில காரணங்களால் நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது.
