கடந்த 2 வருஷத்துல நான் எடுத்த தவறான முடிவு.. இனி ஏமாற்றவே மாட்டேன்.. மேடையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நடிக ரவி மோகன்..!! – cinefeeds
Connect with us

CINEMA

கடந்த 2 வருஷத்துல நான் எடுத்த தவறான முடிவு.. இனி ஏமாற்றவே மாட்டேன்.. மேடையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நடிக ரவி மோகன்..!!

Published

on

வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து சர்ச்சைகளுக்குப் பிறகு, சென்னையில் நடந்த ‘ஜே.எஃப்.டபிள்யூ’ விருது விழாவில் நடிகர் ரவி மோகன் முதல்முறையாக மேடையில் ரசிகர்களிடம் கண்ணீருடன் மன்னிப்பு கோரினார். கடந்த 2024-ல் மனைவி ஆர்த்தியுடனான பிரிவை அடுத்து, தனது 23 ஆண்டு திரைப்பயணத்தை நினைவு கூர்ந்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் எடுத்த தவறான முடிவு பலரைக் காயப்படுத்தியதாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

தன்னை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, மேடையில் மண்டியிட்டு இனி சினிமாவையோ, ரசிகர்களையோ ஏமாற்ற மாட்டேன் என வாக்குறுதி அளித்தார். சந்தோஷ், தனி ஒருவன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களை நினைவு கூர்ந்த அவர், நிச்சயம் ஒரு வலுவான கம்பேக் கொடுப்பேன் என உறுதியளித்தார். இந்தச் சர்ச்சைகள் மனநலம் குறித்த விவாதத்தை உருவாக்கியதில் தனக்கு நிம்மதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in