CRIME
“நீ ரொம்ப அழகா இருக்க!”.. ஆசை வார்த்தை கூறி சப்-இன்ஸ்பெக்டர் செய்த அதிர்ச்சி வேலை… எஸ்பி ஆபீசில் பெண் கொடுத்த அதிரடி புகார்!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு குறித்துப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, அங்குப் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபு என்பவர் பாலியல் வன்கொடுமை மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல் நிலையம் வந்த பெண்ணிடம் முதலில் ஆறுதலாகப் பேசிய சப்-இன்ஸ்பெக்டர், அவருக்கு ஒரு வேலை வாங்கித் தருவதாகவும், தனியாகத் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும், “நீ மிகவும் அழகாக இருக்கிறாய்; உனக்காக என் மனைவியைக் கூட கைவிடத் தயார்” என்று கூறி, கடந்த ஓராண்டாகத் திருமணப் பொய் வாக்குறுதிகளை அளித்து அந்தப் பெண்ணைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
இந்தச் சூழலில், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் நேற்று மாலை 4 மணியளவில் மாவட்ட எஸ்.எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபு, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த எஸ்.எஸ்.பி., முதற்கட்ட நடவடிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபுவை தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
