அதிர்ச்சி!..கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து.. 3 நாட்கள் அறைக்குள் சிறைவாசம்..சிக்கிய 58 வயது இன்ஜினியர்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சி!..கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து.. 3 நாட்கள் அறைக்குள் சிறைவாசம்..சிக்கிய 58 வயது இன்ஜினியர்..!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது சொந்த மருமகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் மூத்த ரயில்வே பிரிவு பொறியாளரான முகேஷ் குமார் திவாரி என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாகப் போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த இவரைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆலம்பாக் பகுதியில் உள்ள ரயில் பெட்டி பழுது பார்க்கும் பட்டறை அருகே அவர் நடமாடுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது பாலியல் வன்கொடுமைப் பிரிவும் சட்டப்படியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு கடந்த 2023 நவம்பரில் முகேஷ் குமார் திவாரியின் மகனுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான முதல் நாளிலிருந்தே கணவர் மற்றும் நாத்தனார்களால் மது அருந்த வற்புறுத்தப்பட்டு, சிகரெட் காட்டிக் கொடுமைப்படுத்தப்பட்டதாகப் பெண் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பிய அந்த பெண்ணிற்கு, மாமனார் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மூன்று நாட்களாக அறைக்குள் பூட்டி வைத்துத் கொடூரத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். வீட்டில் நடக்கும் பார்ட்டிகள் குறித்துக் கேட்டபோது, “இது பணக்காரர்களின் பொழுதுபோக்கு” என மாமனார் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும், ஒரு வழியாகக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பெண் போலீசாரை அழைத்துத் தப்பியதாகவும் அந்தப் புகாரில் நெஞ்சை உலுக்கும் பல திடுக்கிடும் உண்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in