LATEST NEWS
“இனி பெயரளவுக்கு இருக்கக் கூடாது!”.. மாற்றுத்திறனாளிகள் நலனில் முதலமைச்சர் விஜய் எடுத்த விஸ்வரூபம்.. அலறும் அதிகாரிகள்..!!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை பெயரளவுக்கு மட்டுமே இருந்து வந்த இந்த இடஒதுக்கீட்டு நடைமுறையை, இனிமேல் எவ்வித தொய்வுமின்றி முழுமையாக செயல்படுத்தி அவர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அவர் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான நவீன உபகரணங்களை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் தீர்வு கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்த கனிவான மற்றும் அதிரடி உத்தரவுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றனர்.
