CRIME
பகீர்..! அறைக்குள் நுழைந்த மர்ம நபர்… அலறிய மாணவி..! 10 முறை கத்தியால் குத்திய கொடூரன்… சிக்கப் போவது யார்..?!
பிலாய் பகுதியில் உள்ள வைஷாலி நகரில் தங்கி செவிலியர் படிப்பு படித்து வந்தவர் குஷி சாகு. இவர் தனது படிப்பிற்காக வேறு நகரத்திலிருந்து இந்த பகுதிக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த மர்ம நபர், குஷியை கத்தியால் ஓங்கி பலமுறை குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 10-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த குஷி சாகு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வைஷாலி நகர் காவல்துறையினர், குஷியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளியைப் பிடிக்க தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, இது ஒருதலைக் காதல் அல்லது காதல் விவகாரம் காரணமாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலையாளி யார் என்பதைக் கண்டறிய, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவத்தின் போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இளம் பெண் ஒருவர் பகல் நேரத்திலேயே தங்கியிருந்த அறையில் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
