“24 வயதில் ஸ்டாலின் சிறையில்.. நீங்க என்ன பண்ணுனீங்க ‘புரோ’?.. முதல்வர் விஜய்யை மேடையிலேயே வெளுத்து வாங்கிய ஆ.ராசா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“24 வயதில் ஸ்டாலின் சிறையில்.. நீங்க என்ன பண்ணுனீங்க ‘புரோ’?.. முதல்வர் விஜய்யை மேடையிலேயே வெளுத்து வாங்கிய ஆ.ராசா..!!

Published

on

தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தமிழக முதல்வர் விஜய்யை நோக்கி மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். ‘லௌகீக இன்பங்களை’ அனுபவிக்க வேண்டிய இளமைப் பருவத்தில், அதுவும் புதிதாகத் திருமணமாகியிருந்த 24 வயதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது கொளத்தூரில் ஸ்டாலினைக் கொத்து பரோட்டா போட்டதாக விமர்சித்துப் பேசும் விஜய், தனது 24 வயதில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று ஆ.ராசா காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அன்று சிறையில் கடுமையான அடிகளையும் உதைகளையும் வாங்கியபோதும், தனது தந்தை கலைஞர் கருணாநிதியிடம் “நான் சிறையில் அடி வாங்கினாலும் பரவாயில்லை, நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் உறுதியோடு கூறியதாகத் தெரிவித்தார். இத்தகைய தியாக வரலாறும், போராட்டப் பின்னணியும் கொண்ட ஒரு தலைவரைப் பார்த்து, அரசியலுக்குப் புதிதாக வந்துள்ளவர்கள் தரம் தாழ்ந்து விமர்சிப்பது முறையல்ல என்றும், தியாகத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் உள்ள வித்தியாசத்தை விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஆ.ராசா தனது உரையில் சாடியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in